Posts

Showing posts from 2019

பிறந்த நாள் வாழ்த்து கவதை

Image
கவிநிற உருவம் கருப்பு வைரம் கள்ளிக்காட்டு காளை கவிபாடும் கருங்குயில்... காதல் மன்னன் கவிதை கண்ணன் கண்ணால் பேசும் காவிய குறும்பன்... கண்ணதாசனின் கண்ணன் கவிஞரின் மன்னன் காவியம் படைத்த கலைஞன்.... கண்ணோடு காதல் பேசி கனவோடு கனவுகண்டு கற்பனையோடு கவிதை பாடி கண்ணிகளுக்கு எல்லாம் காதல் கண்ணனாய் கருநிற சித்திரமாய் இருக்கும் கணேசன் என்னும் கண்ணனுக்கு இன்று அகவை தினமாம்..... அடடா... வாழ்த்துகிறேன் ச்சி சீ சீ என்று இல்லாமல் சிந்தனையோடு சினம்  இல்லாமல் சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறேன்... நான் கோவில் மாடாய் வலம் வந்து... குலம்மாடாய் கும்பிட்டு... இனிய அகவை தினத்தை இந்த அடியேன்... உனக்கு..... 🎂💐🎂💐🎂

அனாதைக்குழந்தைகள்

Image
அன்புயெனும் அன்பை இழந்து.. ஆடையெனும் ஆசையை இழுந்து இன்பமெனும் இனிமையை இழந்து.. உறவுயெனும் உரிமையை இழந்து.. உணர்வுயெனும் உணவை இழந்து.. துன்பமெனும் துணிவை இழந்து.. பாசமெனும் பண்பை இழந்து.. இருப்பிடம் இல்லாமல் திரியும் அனாதைக் குழந்தைகள்... ......... இராச

1.வானம்.

விண்வெளியில் விழாக்கோலங்கள் இடி இடி இடிக்க-மத்தலங்களாய்... மழை சல சலக்க-அது வீணைகளாய்... மின்னல்கள் மின்மினுக்க அலங்கார விளக்குகளாய்... அட..அடடா... என்ன இத்தனை அதிசயங்கள் விண்வெளியில்... ஆம், இது கடவுளின் படைப்பா இல்லை இயற்கையின் அதிசயமா-இத்தனை நிகழ்வுகள் நடக்குமா விண்வெளியில்... ஆம், இதனால் தானோ உலகம் போட்டிபோடுகின்றன உன்னை அடைவதற்கு... இல்லை.. இல்லை... இப்படியொரு நிகழ்வு- ஏன் மனித குலத்திற்கு நிழவில்லை... வெறும் போர் இயற்கை அழிவுகள் மட்டும் நிகழ்கிறதே-அவை கடல் கொந்தளிப்பாலும், பூமி சீற்றங்களாலும், வெள்ளப்பெருக்காலும், காற்றின் சூறைகளாலும்,.. ஆம்,.. இன்னும் எத்தனை நிகழ்வுகள் நடக்கிறதோ... நடக்க போகிறதோ எந்தாயே... ஏன்? பிடிக்கவில்லையா? இவர்களின் வளர்ச்சியைக் கண்டு... .......................................... இராச .