பிறந்த நாள் வாழ்த்து கவதை

கவிநிற உருவம்
கருப்பு வைரம்
கள்ளிக்காட்டு காளை
கவிபாடும் கருங்குயில்...

காதல் மன்னன்
கவிதை கண்ணன்
கண்ணால் பேசும்
காவிய குறும்பன்...

கண்ணதாசனின் கண்ணன்
கவிஞரின் மன்னன்
காவியம் படைத்த
கலைஞன்....

கண்ணோடு காதல் பேசி
கனவோடு கனவுகண்டு
கற்பனையோடு கவிதை பாடி
கண்ணிகளுக்கு எல்லாம்
காதல் கண்ணனாய்
கருநிற சித்திரமாய் இருக்கும்
கணேசன் என்னும்
கண்ணனுக்கு இன்று அகவை தினமாம்.....

அடடா...
வாழ்த்துகிறேன் ச்சி சீ சீ என்று
இல்லாமல்
சிந்தனையோடு
சினம்  இல்லாமல்
சீரும் சிறப்புடனும்
வாழ வாழ்த்துகிறேன்...

நான் கோவில் மாடாய்
வலம் வந்து...
குலம்மாடாய் கும்பிட்டு...
இனிய அகவை தினத்தை
இந்த அடியேன்...
உனக்கு.....

🎂💐🎂💐🎂

Comments